இந்தியாவின் மிகப்பெரிய பியூர் ப்ளே கிரடிட் கார்ட் வழங்குனரான ஷிஙிமி கார்ட், இந்தியாவின் மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெயில் ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து தங்களது கூட்டு பிராண்டான ‘ரிலையன்ஸ் SBI கார்ட்’ ஐ வெளியிட்டன.
ரிலையன்ஸ் SBI கார்டு மற்றும் ரிலையன்ஸ் SBI கார்டு பிரைம் – என்ற இரு வேறு வகைகளில் இந்த கூட்டு பிராண்டு கார்டு, வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளின் அடிப்படையில் பல்வேறு வெகுமதிகள் மற்றும் நவீன வாழ்க்கைமுறை பாணியிலான கூடுதல் சலுகைகளை வழங்க அவை ஒவ்வொன்றும் துல்லியமாக பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
‘ஆன்லைனிலும் மற்றும் எங்களின் அனைத்து ரிலையன்ஸ் விற்பனை நிலையங்களிலும் ஷாப்பிங் செய்வோருக்கு ரிலையன்ஸ் SBI கார்ட் மூலம் ஒரு பரந்து விரிந்த அளவிலான பலன்கள், தனிப்பட்ட தள்ளுபடிகள் மற்றும் வெகுமதிகளை வழங்குவதற்கு , கார்டு தொழில்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் SBI கார்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருப்பதில் உற்சாகமடைந்திருக்கிறோம்’ என்று ரிலையன்ஸ் ரீடெயில் லிமிட்டட் இயக்குநரான வி. சுப்ரமணியன் கூறினார்
SBI கார்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றஉம் சிஇஓ அபிஜித் சக்ரவர்த்தி கூறியதாவது: நுகர்வோர் பிரிவுக்கு பொருத்தமான வகையில், அனைத்தும் அடங்கிய முழுமையான தயாரிப்பாக ரிலையன்ஸ் SBI கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்துக்கும் இணக்கமான வகையில் இது வழங்கக்கூடிய பயன்பாட்டு வழிமுறைகள் இதை புகழ்பெற்ற கிரடிட் கார்டாக திகழச் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.



