fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் பேச்சு, கட்டுரை போட்டி

திருப்பூரில் பேச்சு, கட்டுரை போட்டி

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க மாணவர் அணி நடத்தும் மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி பன்னிரண்டார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது.

இதனை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். விழாவில் சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது அப்பாஸ், வீரநந்தகுமார் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் செலின் ராணி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img