fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் நடைப்பயிற்சி சாலையை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் துவக்கினார்

தூத்துக்குடியில் நடைப்பயிற்சி சாலையை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் துவக்கினார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (இன்று 4ம் தேதி) சென்னையிலிருந்து
காணொலி காட்சி வாயிலாக மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம்- சுகாதார நடைபாதை ஹெல்த் வாக் சாலையை திறந்து வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெல் ஹோட்டல் முன்புறம் இருந்து மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பொது மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள கொடி யசைத்து ஆரம்பித்து வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட் சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண் முகையா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கௌரவ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img