fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டிடம் கட்டக்கூடாது

நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டிடம் கட்டக்கூடாது

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அரசு வகுத்துள்ள வழிமுறைகளான முழுமைத் திட்ட விதி, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மலையிட கட்டிட விதிகள் 1993, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 ( திருத்தப்பட்டது -2022) ஆகிய விதிகளுக்குட்பட்டும், கட்டிட கலை மற்றும் அழகுணர்வு காப்பு கூறுகள் குழுமம் மற்றும் மலையிட பாதுகாப்புக் குழுமம் ஆகியவற்றின் ஒப்புதலின் அடிப்படையில் கட்டிட அனுமதி மற்றும் மனைப்பிரிவு அனுமதிகள் சம்மந்தப்பட்ட அதிகாரம் படைத்த அலுலவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

கட்டிட அமைவிடம் மற்றும் பரப்பளவிற்கு ஏற்ப அனுமதி ஊராட்சி, நகராட்சி, கட்டிட கலை மற்றும் அழகுணர்வு காப்பு கூறுகள் குழுமம் மற்றும் மலையிட பாதுகாப்புக் குழுமத்தால் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்சமயம் நீலகிரி மாவட்ட எல்லைக்குள் உரிய அனுமதியின்றி கட்டிங்கள் கட்டப்பட்டு வரு வதாகவும், விவசாய நிலங்களை அழித்து, விவசாயம் அல்லாத நோக்கத்திற்காக, அனுமதியற்ற முறையில் மனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு வருவ தாகவும், உரிய அனுமதியின்றி நிலஅபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

அப்புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமீறல்கள் தெரியவரும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.
எனவே, முறையான அனுமதி ஏதும் பெறப்படாமல் அமைக் கப்படும் மனைப்பிரிவுகளில் பொதுமக்கள் யாரும் மனைகளை வாங்கி ஏமாறவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் மற்றும் அபிவிருத்தியாளர்கள் யாரும் முறையான கட்டிட அனுமதி பெறப்படாமல் பணி கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அனுமதியற்ற கட்டிடங்களை இடிக்கவோ அல்லது மூடிமுத்திரையிடவோ தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மலையிட கட்டிட விதிகள் 1993, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் – 1998 ( திருத்தப்பட்டது -2022)ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நில அபிவி ருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47 ஏ, 56 மற்றும் 57 ன் கீழும், கடுமையான நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்படுகிறது.

எனவே நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டிடம் கட்ட வேண்டாம் எனவும், உரிய அனுமதியின்றி மனைப்பிரிவு, நிலஅபிவிருத்தி பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. 

படிக்க வேண்டும்

spot_img