fbpx
Homeபிற செய்திகள்ரூ.4.39 கோடி திட்டப்பணிகளை ஆய்வு செய்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

ரூ.4.39 கோடி திட்டப்பணிகளை ஆய்வு செய்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் பொங்கலூர் ஊராட்சி ஒன் றியத்திற்குட்பட்ட பொங்கலூர் மற்றும் மாதப்பூர் ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது ஆய்வு மேற்கொண்டார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் செய்தி யாளர்களிடம் தெரிவித் ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட் டப்பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்த திட் டப்பணிகள் பொது மக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அந்த வகையில், இன்றைய தினம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், மாதப்பூர் ஊராட்சியில் ரூ.52.55 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் நினைவு சமத்து வபுரத்தில் உள்ள 93 வீடுகள் புனரமைக்கும் பணிகள் மற்றும் ரூ.43.88 இலட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் விளையாட்டு திடல், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, சாலை வசதிகள், தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்மோட்டார் அறை மற்றும் நியாயவிலைக்கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம் படுத்தல் பணிகளையும், பொங்கலூர் ஊராட்சியில் ஒதுக்கப்பட்ட வருவாயின் திட்டப்பகுதி திட்டம் 2022-2023 கீழ் ரூ.3.42 கோடி மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்டு வரும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலம் என மொத்தம் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல் வேறு திட்டப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட் சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும், இத்திட்டப்ப ணிகளை தரமாகவும், விரைவாகவும் குறித்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர் களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த செய்தியாளர் பயணத்தின் போது, பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் . விஜயகுமார், கந்தசாமி, உதவி பொறியாளர்கள் கார்த்திக் குமார், மஹா லட்சுமி, பணி மேற் பார்வையாளர்கள் பாலன், கந்தசாமி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img