fbpx
Homeபிற செய்திகள்கிராமத்தில் புகுந்த காட்டு யானையை பிடிக்கும் முயற்சி தற்காலிக நிறுத்தம்

கிராமத்தில் புகுந்த காட்டு யானையை பிடிக்கும் முயற்சி தற்காலிக நிறுத்தம்

சத்தியமங்கலம் புலியை காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் நடமாடுகின்றன வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வாழை கரும்பு மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து அய்யம்பாளையம் கிராமத்தில் புகுந்த காட்டு கட்டையன் யானை பயிர்களை சேதப்படுத்தியது வந்தது. இந்நிலையில் வனத்துறையினர் யானையை பிடிக்க இரண்டு கும்கி யானைகள்ள் வரவழைக்கப்பட்டது .

வனத்துறை ஊழியர்கள் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு கட்டையன் யானையை கண்காணித்து வந்தனர்.

தற்போது கட்டையன் யானை அடர் வனப்பகுதிக்குள் சென்று விட்டதால் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பிடிக்கும் முயற்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

கட்டையன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானை அடர்ந்த வனப்பகுதியில் இருந்து திறந்தவெளி பகுதிக்கு வரும் பட்சத்தில் அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு உடனடியாக யானையைப் பிடிக்கும் பணிகள் தொடரப்படும்.

கட்டையன் யானையை பிடிக்க கொண்டுவரப்பட்ட இரண்டு கும்கி யானைகள் மீண்டும் ஆனைமலை புலிகள் காப்பக முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

படிக்க வேண்டும்

spot_img