தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய ரகங்களின் சாகுபடி- விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம் பரிய உணவு வகைகள் குறித்த வேளாண்மை கண்காட்சி நடந்தது. இதில் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பங்கேற்று நேற்று இணையில்லா பனை என்ற புத்தகத்தினை வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் பங்கேற்றனர். முன்னதாக வேளாண்மை துறை இணை இயக்குனர் பால சுப்ரமணியன் வரவேற்று பேசினார்.
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற் றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் தேரடி மணி, பனை ஆராய்ச்சி மைய சிறப்பு அலுவலர் ஸ்வர்ண பிரியா, வேளாண்மை துணை இயக்குனர் மனோ ரஞ்சிதம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்டின் ராணி, வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா முருகன், கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர்கள் ராமசாமி ( வடக்கு), சுரேஷ்காந்தி (கிழக்கு) மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.



