fbpx
Homeபிற செய்திகள்ஜெருசலேம் பொறியியல் கல்லூரி இன்டர்செல் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜெருசலேம் பொறியியல் கல்லூரி இன்டர்செல் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னையை தளமாகக் கொண்ட ஜெருசலேம் பொறியியல் கல்லூரி தங்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்குத் தயாராவதற்கு, அவர்களுக்கு முதல் AI மற்றும் SaaS அடிப்படையிலான வழிகாட்டுதல் தளமான Intercell உடன் கூட்டாண்மை வைத்துள்ளது.

இந்த வழிகாட்டுதல் திட்டத்தின் மூலம், ஜெருசலேம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் வழிகாட்டிகளுடன் 1:1 நேரலை வழிகாட்டல் அமர்வுகளை முன்பதிவு செய்யலாம். மாணவர்களுக்கு வளாகத்தில் இத்திட்டத்தைப் பற்றி ஒரு விளக்கவுரை வழங்கப்படும்.

Intercell வழங்கும் சேட் சப்போர்ட் மூலம் மாணவர்கள் 6 மாதங்கள் வரை வழிகாட்டிகளுடன் தொடர்பு கொள் ளலாம். மென் திறன்கள் குறித்து 2-3 நாட்களுக்கு வளாகத்தில் பயிலரங்கம் நடக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் சான்றிதழ், தொழில் வழிகாட்டுதல் அறிக்கை மற்றும் வேலைகள்/இன்டர்ன்ஷிப் பரிந்துரை ஆகியவை வழங்கப்படும்.

தாகூர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் பேராசிரியை டாக் டர் எம்.மாலா பேசுகையில், Intercell உடன் கூட்டுசேர்வதன் மூலம், மாண வர்கள் தங்கள் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டக்கூடிய தொழில் வல்லுநர்களுடன் நேரடி அணுகலைப் பெறுவார்கள். வெற்றிகரமான கூட்டாண் மைக்காக காத்திருக்கிறோம் என்றார்.

இண்டர்செல் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அருணாப் வர்மா பேசுகையில், “ஜெருசலேம் பொறியியல் கல்லூரியுடன் கூட்டாண்மை வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் மாணவர்கள் தங்கள் தொழில் இலக்குகளை அடைய உதவுகிறோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img