fbpx
Homeபிற செய்திகள்‘மூளை, தண்டுவட சிகிச்சை சிறப்பு பிரிவு’ காவேரி மருத்துவமனையில் தொடக்கம்

‘மூளை, தண்டுவட சிகிச்சை சிறப்பு பிரிவு’ காவேரி மருத்துவமனையில் தொடக்கம்

சென்னை – ரேடியல் ரோட்டில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர்வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு இப்பிரிவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் ச. சந்திரகுமார் கூறியதாவது: உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடனும் திறமையான நிபுணர்கள் குழுவோடு இணைந்து, மூளை – நரம்பு அறிவியல் துறைக்கான உயர் சிகிச்சை பிரிவினை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

தொடங்கப்பட்டுள்ள 3T MRI, 3D–4K இயக்க திறனுள்ள நுண்ணோக்கி, தொடர்ச்சியான அறுவைசிகிச்சைக்கால ஊடுருவல் மற்றும் ஊடுருவல் அல்லாத சிகிச்சைக்கான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் நரம்பியல் நோயாளிகளுக்கான உயிர்காப்பு தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை உட்பட, தேவையான அனைத்து வசதிகள் மற்றும் மிக நவீன சாதனங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

இச்சிகிச்சை பிரிவு, மிக நுட்பமான மூளை மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைகளை மேற்கொள்கிறது. பக்கவாதம் (ஸ்ட்ரோக்) மற்றும் விபத்துக்காய சிகிச்சை மேலாண்மையையும் மற்றும் விரிவான மறுவாழ்வு செயல்திட்டத்தையும் திறம்பட செயல்படுத்துகிறது என்றார்.

‘வெற்றிகரமான சிகிச்சை, துல்லியமான நோயறிதல் முறையில் இருந்து தான் தொடங்குகிறது. அதிக சிக்கலான மற்றும் தீவிர பாதிப்பு நிலைகளில் நோயாளிகள் சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகின்ற நிலையிலும் நேர்த்தியான சிகிச்சையின் மூலம் அவர்களை குணப்படுத்தும் திறன் உள்ள சிறப்பு நிபுணர்களின் குழு இருக்கிறது’ என்றார் காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ்.

‘எந்தவொரு பிரச்சனை அல்லது அவசர நிலையிலுள்ள நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை சிகிச்சையின் மூலம் மேம்படுத்துவதில் வலுவான உறுதியும், அர்ப்பணிப்பும் கொண்டிருக்கிறோம்’ என்றார் நரம்பியல் துறையின் குழும வழிகாட்டி மற்றும் இயக்குநர் டாக்டர் கே. ஸ்ரீதர்.

படிக்க வேண்டும்

spot_img