முன்னணி இரு சக்கர மின்-வாகன (EV2W) அசல் உபகரண உற்பத்தியாளர்களில் (OEM) ஒன்றான பியூர் EV, தனது புதிய EV டீலர்ஷிப் ஷோரூமான பாக்யலக்ஷ்மி மோட் டார்ஸை, தமிழ்நாட்டில் உள்ள, திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி ஹை ரோடு, ஜே-பி. தோட்டம், ஆவடியில் திறந்துள்ளது.
தமிழ்நாடு அடகு வியாபாரிகள் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் மற்றும் பாரதிய உத்யோக் வணிகர் மண்டலத்தின் தலைவர் சுவாமி தேஜானந்த் உள்ளிட்ட கௌரவ விருந்தினர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
நாட்டிலும் வெளிநாடுக ளிலும் பரந்துள்ள அதன் டீலர்ஷிப் நெட்வொர்க் மூலம் EV2W-வில் 70,000+ டெலிவரிகளை பியூர் EV தாண்டியுள்ளது.
நிறுவனம் தெலுங்கானாவில் நிறு வியுள்ள 1,00,000 சதுர அடி தொழிற்சாலையில் வாகனம் மற்றும் உள் பேட்டரி உற்பத்தி பிரிவுகள் உள்ளன.
வருடாந்திர வாகன உற்பத்தி திறனை 120,000 யூனிட்களாக மற்றும் வருடாந்திர பேட்டரி உற்பத்தி திறனை 0.5 GWh-ஆக உயர்த்தும் நோக்கத்துடன் அதை 2,00,000 சதுர அடி வச தியாக விரிவாக்கும் நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது, இது நிதியாண்டு 24-ன் இறுதிக்குள் தயாராகி விடும்.
திருவள்ளூர் ஆவடியில் பியூர் இவி-இன் டீலர்ஷிப் திறப்பு விழாவில், பியூர் இவி-இன் தலைமைச் செயல் அதிகாரி ரோஹித் வதேரா கூறியதாவது:
பியூர் இவி-இல், தயாரிப்புகளை உருவாக்குவது மட்டுமில் லை, சிறந்து விளங்குவதில் எங்களுக்குள்ள அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் டீலர்களுடன் உறவுகளை உருவாக்கி வருகிறோம்.
தென்னிந்தியாவில் செழிப்பாக உள்ள விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க் மூலம், எங்கள் வெற்றி நாடு முழுவதும் பரவியுள்ளது என்றார்.



