உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதனங்களின் பிராண்டான ஓபோ (OPPO) அதன் புதிய ஸ்மார்ட்போனான ரெனோ10 5ஜி (Reno10 5G) யின் விற்பனை ஜூலை 27 முதல் ரூ.32,999/- என்கிற விலையில் துவங்கி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் OPPO E-ஸ்டோர், ஃபிளிப்கார்ட், மற்றும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது. ஐஸ் ப்ளூ, சில்வரி கிரே ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 3D கர்வ்டு வடிவமைப்புடன் வரும் இந்த சாதனம் எடை குறைவானதாகவும், பிடிப்பதற்கு எளிதானதாகவும் இருக்கும்.
120Hz 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே மற்றும் 93% ஸ்கிரீன்-டூ-பாடி விகிதத்துடன் வருவதால் பார்டர் இல்லாத மற்றும் காட்சிகளுக்கு உள்ளே சென்று பார்ப்பது போன்ற அனுபவம் கிடைக்கும்.
இது Dragontrail Star2 டிஸ்பிளே மற்றும் உறுதியான பாலிகார்பனேட் பின்புறத்துடனும் இருக்கும். டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் – ரியல் ஒரிஜினல் சவுண்ட் டெக்னாலஜியுடன் வருகிறது,
மிகத் தெளிவான போர்ட்ரைட் புகைப்படங்களுக்கான டெலிபோட்டோ கேமரா இந்த Reno10 5G-யின் ஆற்றல்மிக்க கேமரா சிஸ்டத்தில் ஒரு 64MP OV64B அல்ட்ரா-கிளியர் மெயின் கேமரா, ஒரு 32MP IMX709 டெலிபோட்டோ போர்ட்ரைட் கேமரா, ஒரு 8MP IMX355 112கு அல்ட்ரா- வைடு கேமரா, மற்றும் ஒரு 32MP OV32C அல்ட்ரா-கிளியர் செல்ஃபி கேமரா ஆகியன உள்ளன.
இந்த அசத்தனால கேமரா அமைப்புகளின் மூலம், போர்ட்ரைட் புகைப்படங்களை எடுக்கையில் பயனாளர்கள் ஒவ்வொரு படங்களையும் துல்லியமான காட்சி விவரங்களுடன், அற்புதமான தெளிவுடன், குறைவான வெளிச்சத்தில் அல்லது வைடு- ஆங்கிள் ஷாட்களையும் படமாக்கலாம்.



