fbpx
Homeபிற செய்திகள்பிரதான குழாயில் தண்ணீர் கசிவு: கோவையில் குடிநீர் சப்ளை பாதிப்பு

பிரதான குழாயில் தண்ணீர் கசிவு: கோவையில் குடிநீர் சப்ளை பாதிப்பு

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர் திட்டம் &2ல் வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலைத் தொட்டி வரை குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் முத்துக்கல்லூர் என்ற இடத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை சீர்செய்யும் பணி நாளை (30ம் தேதி) நடைபெற உள்ளது.

இதனால் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரிபாளையம், கணபதி, காந்திபுரம், புலியகுளம், ரத்தினபுரி, சித்தாபுதூர் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்து ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img