fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு பொருட்காட்சியில் மாநகர காவல்துறை அரங்கிற்கு வந்த கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார்

கோவை அரசு பொருட்காட்சியில் மாநகர காவல்துறை அரங்கிற்கு வந்த கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார்

கோவை சிறை மைதானத்தில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியில் கோவை மாநகர காவல் துறை சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கிற்கு பிரபல க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் சனிக் கிழமை (27ம் தேதி) வருகை புரிந்தார். அங்கு காட் சிப்படுத்தப்பட்டிருந்த ஏகே 47 உள்பட விதவிதமான துப்பாக்கிகள், வெடி குண்டு கண்டுபிடிப்பு உபக ரணங்கள், கண்ணீர் புகை வீசும் டிரோன் மற்றும் அரிய புகைப்படங்களை அவர் ஆர்வத்துடன் பார் வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற கோவை மாநகர காவல்துறையின் காவல் இன்னிசைக் குழு வின் இசை நிகழ்ச்சியை பொதுமக்களோடு அமர்ந்து மகிழ்ச்சியாகக் கண்டு களித்தார்.

பாக்கெட் நாவல்

1500க்கும் மேற்பட்ட புதினங்களையும், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 1980-90களில் தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல்” புத்தகங்களை ஆயிரக் கணக்கில் எழுதியதன் மூலம் புகழ்பெற்ற க்ரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ் குமாருடன் அரசு பொருட் காட்சிக்கு வருகை புரிந்திருந்த பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கோவை மாநகர ஆயு தப்படை காவல் உதவி ஆணையர் சேகர், காட்டூர் சரக காவல் உதவி ஆணையர் கணேசன், மோட்டார் வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜூ, சி-1 காட் டூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் இருபால் காவலர்களும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img