fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கிரிக்கெட் போட்டி: மெக்னோ அணிக்கு வெற்றிக்கோப்பை

கோவையில் கிரிக்கெட் போட்டி: மெக்னோ அணிக்கு வெற்றிக்கோப்பை

இளம் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் சிறுவர்கள். இளைஞர்கள் என பல் வேறு அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் விளை யாட்டில் வீரராக ஜொலிப் பதற்கு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின் றனர். இது போன்ற ஆர்வமுள்ள வீரர்களை ஊக்குவித்து மாநில,தேசிய அளவில் சிறந்த வீரராக மாற்றும் வகையில் கோவையை சேர்ந்த தனியார் குழுமத்தினர் கிரிக்கெட் தொடர் போட்டிகளை நடத்தி வரு கின்றனர்.

அதன்படி கோவையை அடுத்த வட்டமலைபாளையம் தனியார் கல்லூரி மைதா னப் பகுதியில் நடை பெற்றது. இரண்டு நாட் களாக நடைபெற்ற இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இளம் வீரர்கள் கலந்து கொண்டனர்.

கோவை சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற இதில், 32 அணிகளை சேர்ந்த வீர்ர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இதன் இறுதி போட்டியில் பெரியநாயக்கன்பாளையம் மெக்னோ மற்றும் கோவில் பாளையம் பி.சி.சி ஆகிய அணிகள் மோதின.

இதில் மெக்னோ அணியினர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img