fbpx
Homeபிற செய்திகள்மூன்றாமாண்டு படிப்பு முடிந்ததும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் விஇடி கல்லூரி

மூன்றாமாண்டு படிப்பு முடிந்ததும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் விஇடி கல்லூரி

வேளாளர் கல்வி அறக்கட்டளையின் ஓர் அங்கமான VET கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியானது 2019-&-2020 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் 12 இளங்கலைப் பாடப்பிரிவுகளும் 2 முது கலைப் பாடப் பிரிவுகளும் உள்ளன.

வணிகவியலில் 4 பாடப்பிரிவுகளும், கணினி அறிவியலில் 4 பாடப்பிரிவுகளும், வணிக மேலாண்மையியல், ஆங்கில இலக்கியம், ஆடை வடிவமைப்புத்துறை மற்றும் சமூகவியல் ஆகியபாடப்பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன.

கணினி அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய MSME வகுப்புகள், இணையவழிப் பாதுகாப்பு, வலைதள வடிவமைப்பு உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன.

பயிற்சி வகுப்புகள்

மேலும் UPSC, TNPSC உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளும் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு BANKING, CA, ACCA உள்ளிட்ட கல்வியுடன் இணைந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

இக்கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறையானது வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியினை வழங்கி வருதலால் சுயதொழில் புரிய விரும்பும் மாணவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பினை வழங்கி வருகிறது.

அத்துடன் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தினைத் தாண்டி ஜவுளித் தொழில் சார்ந்த பிற துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதன் தனித்தன்மையாகப் படைப்பாற்றலில் விருப்பமுள்ள மாண வர்களுக்கு இத்துறை பேருதவியாக இருப்பதுடன் தொழில் வல்லுநராக்கும் மாற்றத்தைக் கொண்டு வர முயலுகின்றது.

மேற்கண்ட துறைகள் மட்டுமல்லாது ஈரோடு மாவட்டத்திலேயே முதன்முதலாக சமூகவியல்; (SOCIOLOGY) துறை நம் கல்லூரியில் இருப்பது தனிச்சிறப்பு. இத்துறை குடிமைப் பணிகள் (IAS, IPS, IFS) மட்டுமின்றி சமூகநலத்துறை சார்ந்த அரசுப் பணியிடங்களுக்கும் வேலை வாய்ப்பினைத் தருவனவாக உள்ளது. மேலும் இத்துறை மானுடவியல், உளவியல், குற்றவியல் சார்ந்த உயர்கல்வி கற்கவும் வாய்ப்பளிக்கின்றது.

ஜப்பான், ஜெர்மன், ஃபிரென்ச் உள் ளிட்ட அயலக மொழிகளும் இக்கல் லூரியில் கற்றுத் தரப்படுகின்றன. நம் மாநிலங்களில் மட்டுமன்றி வெளிமாநில, வெளிநாடுகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு அங் குள்ள சிறப்பம்சங்கள் கொண்டு வந்து சேர்க் கப்படுகின்றன.

மாணவர்களின் கல்வி, கலைசார்ந்த விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு முப்பதுக்கும் மேற்பட்ட மன்றங்களின் மூலம் மாணவர்களின் தனித்திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு பயிற்று விக்கப்படுகின்றன.

அனைத்திற்கும் மேலாக மூன்றாண்டு பட்டப்படிப்பு முடித்தவுடன் மாண வர்களுக்குப் பல சிறந்த பன்னாட்டு நிறுவனங்களில் (MNC) உடனடியாக வேலைவாய்ப்புப் பெற்றுத் தரப்படுகிறது.

இதுமட்டுமன்றி மாணவர்களின் ஆளுமைப் பண்பை (Personality Development) வளர்க்கவும், ஆங்கிலமொழித் திறனை (Communicative English) வளர்க்கவும் பயிற்சி பெற்ற சிறந்தஆசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img