Homeபிற செய்திகள்வால்பாறை கோடை விழா: புகைப்பட போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

வால்பாறை கோடை விழா: புகைப்பட போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

வால்பாறை கோடை விழாவை முன் னிட்டு கோவை மாவட்டத்தின் இயற்கை, பண்பாடு, வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்களைக் கொண்டு ஆன்லைன் புகைப்படப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வால்பாறை கோடை விழா 2023ஐ முன்னிட்டு ஆன்லைன் புகைப்படப் போட்டி நடைபெறவுள்ளது. ஆர்வ முள்ளவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வால் பாறை கோடை விழா 2023 வருகின்ற 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடை பெறவுள்ளது.

இவ்விழாவின் ஒரு பகுதியாக ஆன்லைன் புகைப்படப் போட்டி நடை பெறவுள்ளது. புகைப்படங்களின் கருத்து (Theme) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்:

  1. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தாவரங்கள்/விலங்குகள்,
  2. கோயம்புத்தூர் மாவட்டத்தின் கலை/பண்பாடு/விழாக்கள்
  3. கோயம்புத்தூர் மாவட்டத்தின் இயற்கைக் காட்சிகள்/வரலாற்றுச் சின்னங்கள்
    போட்டியாளர்கள் தங்களது புகைப்படங்களை jpg வடிவில் (jpg format) 25ம் தேதி இரவு 10 மணிக்குள் தங்களது விவரங்களுடன் summerfestivalvalparai2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகைப் படங்களை அனுப்பிட வேண்டும்.
  4. இப்போட்டியில் வெற்றி பெறுப வர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000மும் வழங்கப்படவுள்ளது.
  5. இப்போட்டிக்காக சமர்ப் பிக்கப்பட்ட புகைப்படங்கள் கோடை விழாவின் புகைப்படக் கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img