தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல அறக்கட் டளை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடை பெற்றது. தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் நாசரேத் திருமண்டல அறக்கட்டளை தொடக் கப்பள்ளி படித்த மாணவர்களுக்கு பாராட்டுவிழா பள்ளியில் வளாகத்தில் நேற்று ( வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற் புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊரக வட்டார கல்வி அலுவலர் எம்.தேவி, ஓய்வு பெற்ற நர்ஸ் சூப்பிரண்டு பூரணம் ஆகியோர் பேசினார்கள்.
லயன் சிவக்குமார் தலைமை தாங்கி உரையாற்றினார்.
தொடக்க நடுநிலைப் பள்ளி தாளாளர் ஜெபக்குமார் ஜாலி, 5 ம் வகுப்பு படித்து முடித்த மாணவ & மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டினார்.
விழாவில் மாணவ & மாணவிகள் பங்கேற்ற நடனம் நடைபெற்றது. மாணவர்களின் பெற் றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் கூறும் போது, இந்தப்பள்ளியில் படித்து வெளியில் சென்று பத்தாம் வகுப்பில் 450 க்கு மேல் எடுப்பவர்களை தனது சொந்த செலவில் சிம்லாவுக்கு அழைத்து செல்வதாக கூறினார்.



