கோவை ரெசிடென்சி ஓட்டலில் “ கோ கிளேம்“ சார்பில் அனைத்து மாநில கைவினைபொருட்கள் கண்காட்சி விற்பனை நேற்று (19-ந்தேதி) தொடங் கியது. இதனை தி.மு.க. மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் திறந்து வைத்தார்.
வருகிற 21-ந்தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தொடக்கவிழா நிகழ்ச்சியில் யுவா பவுண்டேசன் சசிகலா, லாவண்யா சங்கர், காயத்திரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை “கோ கிளேம்“ ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா, ராகுல் ஆகியோர் செய்திருந்தனர்.



