தமிழக வனத்துறையால் ஆண்டுதோறும் காட்டு யானைகளின் கணக் கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வனச்சரகங்களில் காட்டு யானைகளை கணக்கெடுக்கும் பணியானது நேற்று முதல் துவங்கியது.
அந்த வகையில் மேட்டுப்பாளையம், காரமடை,சிறுமுகை வனச்சரகங்களில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கும் பணியானது அந்தந்த வனச் சரகர்களின் தலைமையில் நடைபெற்றன. கணக்கெடு க்கும் பணி நேற்று (17ம் தேதி) தொடங்கியது. நாளை (19ம் தேதி) வரை நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்பின் முதல் நாளில் வனப் பகுதிகளில் வனத்துறை யினர் மற்றும் தன்னார் வலர்கள் உள்ளிட்டோர் நேரடியாக சென்று கண்களில் தென்படும் யானைகள் குறித்து கணக்கெடுத்தனர்.
கணக்கெடுக்கும் பணியின் இரண்டாவது நாளில் காட்டு யானைகளின் கால் தடங்கள்,சாணம் உள்ளிட்டவற்றை வைத்து மறைமுக கணக்கெடுப்பும்,இறுதி நாளில் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் நீர்நிலைகளில் தங்கியிருந்து அங்கு தாகம் தணிக்க வரும் யானைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியும் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில் நேற்று முதல் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணியா னது துவங்கி உள்ளது. முதல் நாளில் வனத்துறையினர் மற்றும் தன்னார் வலர்கள் வனப்பகுதிக்குள் நேரடியாக சென்று காட்டு யானைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மறைமுகமாக கணக்கெடுக்கும் பணி
இரண்டாம் நாளான இன்று காட்டு யானைகளின் கால் தடங்கள்,சாணம் உள்ளி ட்டவற்றை கொண்டு மறைமுகமாக கணக்கெடுக்கும் பணியானது நடைபெற உள்ளது.
நிறைவு நாளான நாளை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் தாகம் தணிக்க வரும் காட்டு யானைகளை நேரடியாக கண்டு அதன் மூலம் கணக்கெடுக்கும் பணியானது நடைபெற உள்ளது.
மேலும், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட கூத்தாமண்டி, உளியூர், பெத்திக்குட்டை, குஞ்சப்பனை, ஓடந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு வனக்காப்பாளர், ஒரு வனக்காவலர், இரு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் இரு தன்னார்வலர்கள் என ஒரு குழுவிற்கு ஆறு பேர் வீதம் 6 குழுவினர் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,இந்த கணக்கெடுக்கும் பணியானது காலை 6:30 மணி முதல் துவங்கி மாலை 6:30 மணி வரை நடைபெற உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.



