1998 ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் சான் ஜோஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.
மேட்டுப்பாளையம் காட்டூ ரில் சான் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1998 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பள்ளி முன்னாள் மாணவ மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் 98 ஆம் ஆண்டு படித்த 25 மாணவிகள் 30 மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளியின் அன்றைய முதல்வர் சிஸ் டர் செலின் தலைமையில் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர். பல்வேறு ஊர்கள் மற்றும் மாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்தும் இந்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மேட்டுப்பாளையம் வந்து தங்களுடைய பள்ளிக்கால நினைவுகளை மகிழ்ச்சியுடன் தங்களது நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தாங்கள் படித்த வகுப்பறையில் உட்கார்ந்து பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் செரீப், சவிதா காயத்ரி, சேக் அப்துல்லா, லாவண்யா, சந்தோஷ் பணிக்கர் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். தங்களது ஆசி ரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி நன்றியை தெரிவித்தனர். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டரில் நடத்தினார்கள்.



