நீலகிரி மாவட்டத்தில், உதகை பழங்குடியினர் பண் பாட்டு மையத்தில் கைத்தறி மற்றும் துணிநூல்துறையின் சார்பில் சி.எச்.198 தோடர் எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிமிடெட் துவக்க விழா நேற்று (மே 13) நடந்தது.
கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் , மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி பேசியதாவது: இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம், நான் முதல்வன், புதுமைப்பெண்,, மக்களைத்தேடி மருத்துவம் போன்ற பல புதிய திட்டங்களை அறிவித்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
முதல்வரின் வழிகாட் டுதலின்படி, கைத்தறி துறையின் 2023-&2024-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், தோடா பழங்குடியின மக்களின் நலனுக்காக முதன்முறையாக தோடர் எம்பிராய்டரி நெச வாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ,
கைத்தறி துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக 240 தோடர் இன பெண் உறுப்பினர்களை கொண்ட சி.எச்.198 தோடர் எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிமிடெட் என்ற பெயரில் நீலகிரி மாவட் டத்தில் நீண்ட காலங்களாக வசித்து வரும் தோடர் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, புதிய சங்கம் 27.04.2023 அன்று பதிவு செய்யப்பட்டது.
இச்சங்கத்தில் 300 தோடர் இன பெண்கள் உறுப்பி னர்களாக சேர்க்கப்பட உள்ளனர். இச்சங்கத்தின் செயல்பாட்டிற்காக Handloom Support Programme scheme திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தோடர் இன மக்கள் பெண்கள் ஜாக்கெட், மப் ளர், டேபிள்மேட், சோபா கவர், சால்வை, துப் பட்டா, கைப்பைகள், சாரி பால்ஸ், கீசெயின் போன்ற பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றனர். இச்சங்கத்தின் மூலம் தோடர் இன பெண் உறுப் பினர்களுக்கு முதியோர் ஓய்வூதிய திட்டம், குடும்ப ஓய்வூதியம், இலவச மின்வசதி போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் எம்ராய்டரி பணிக ளுக்கு தேவையான அடிப்படை துணி தேவைகள் கைத்தறி துறையின் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும்.
இவர்களின் எம்ப்ராய்டரி துணிகளுக்கு GEOGRAPHICAL INDICATION அங்கீகாரம் கிடைக்க பெற்றுள்ளதால் உலகளவில் பிரசித்தி பெற தேவையான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இவர்கள் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் கோ- ஆப்டெக்ஸ் மற்றும் பூம்புகார் ஷோரூம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தோடர் எம்ப்ராய்டரி டிரஸ் மற்றும் இதர பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இவர்களின் பொருட்களை நாடெங்கிலும் பிரபலபடுத்த கோ ஆப்டெக்ஸ் மற்றும் பூம்புகார் கண்காட்சியில் பங்கு பெற செய்து, விற்பனை அதிகரிக்க உதவி செய்யப்படும்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் தோடர் இன மக்கள் அனைவரும் உறுப்பினர்களாக சேர்ந்து தமிழ்நாடு அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பொருளா தாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றார் அமைச்சர்.
ரூ.2.87 கோடி கல்வி உதவித் தொகை
சுற்றுலாத்துறை அமைச் சர் கா.ராமச்சந்திரன் பேசிய தாவது:
நீலகிரி மாவட்டத்தில் பழங் குடியின மக்களுக்கு கொரோனா காலத்தில் 100 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது பாராட்டுக்குரிய விஷயமாகும். பழங்குடியின மக்கள் வாழ் கின்ற மாவட்டம் நமது நீலகிரி மாவட்டம் ஆகும்.
அதில் தோடர் இன பெண்கள் அதிக அளவில் எம்பிராய்டரி தொழில் செய்து வருகின்றனர்.
இத்தொழிலை மென்மேலும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், முதல்வர் சம் மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். மாவட்டத்தில் இருளர், தோடர், கோத்தர், காட்டுநாயக்கர், ஆலு குறும் பர், பெட்ட குறும்பர், முள்ளு குறும்பர், பணியர் என எட்டு வகையை சேர்ந்த பழங்குடியினர்கள் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பெண்கல்வி உதவித்தொகையாக 3-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் 17,343 பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.87 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பகல்கோடு மந்து பகுதியில் பால் குளிரூட்டும் நிலையத்தினை துவங்க முதல்வர் அறிவித்ததன் அடிப்ப டையில், தற்சமயம் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அமைச்சர்.
சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற் றும் மூலப்பொருட்களை அமைச் சர்கள் வழங்கினர். தோடர் பழங்குடியினரில் சிறப்பாக எம்ப்ராய்டரி செய்த இருவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.,
12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரவுள்ள இரு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், நாவா சைல்டுலைனின் கையே டுகளையும் அமைச்சர்கள் வெளியிட்டனர்.
முன்னதாக, அமைச்சர்கள் பெயர் பலகையினை திறந்து வைத்து, சங்கத்திற்கான பதிவு சான்று, சங்க துணை விதி கள் ஆகியவற்றை பிரதம அமைப்பாளர், மேலாண்மை இயக்குநர் ஆகியோரிடம் வழங்கி, பழங்குடியினர்களின் ஆவண குறும்படத்தினை பார்வையிட்டனர்.
தோடர் பழங்குடியினரின் நடனத்தை பார்வையிட்டு, நடனமாடினார்கள்.
அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், தாம்பரம் சட்டமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.ராஜா, அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், சுர்ஜித் சௌத்ரி (ஓய்வு), மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பொன்தோஸ், கூடுதல் இயக்குநர் கைத்தறி துறை முனைவர் கே.கர்ணன், இணை இயக்குநர் கைத்தறி துறை (சென்னை) கிரிதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, உதகை நகர் மன்றத் தலைவர் வாணீஸ்வரி, உதகை நகர்மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் (எ) மாதன், நாவா செயலாளர் ஆல்வாஸ், தோடர் இன மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



