கிரெடாய் தமிழ்நாடு மண்டலத் தின், 2023-2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சென்னையில் நடைபெற்றது.
அமைப்பின் 7வது தலைவராக ஆர். இளங்கோவன் பதவி ஏற் றார். துணைத் தலைவராக மதன் பி.லண்ட், செயலாளராக எஸ்.ஆனந்த், பொருளாளராக வி. சதாசிவம் மற்றும் தேர்வுத் தலைவராக டபிள்யூ.எஸ். ஹபிப் ஆகியோர் பதவி ஏற்றனர்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்து சாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கவுரவ விருந்தினர்களாக வீட்டுவசதி மற் றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா ஐ.ஏ.எஸ்., சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, டிடிசிபி இயக்குநர் பி. கணேசன், கிரெடாய் நேஷனல் தெற்கு துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
எங்களின் செயல்பாடுகள் தமிழக அரசின் நடவடிக்கைகளுடனும், தொழில்துறை மற்றும் அரசாங்க நடைமுறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும், மாநில அரசின் ரியல் எஸ்டேட் தொலைநோக்கு பார்வை 2030 உடன் ஒருங்கிணைந்து இருக்கும்.
கூட்டமைப்பு
எங்கள் அமைப்பு, ரியல் எஸ்டேட் துறையில் நிலையான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் அரசாங்கத்தின் நோக்கத் துக்கு உறுதுணையாக இருக்கும் என்றார். கிரெடாய் என்னும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு 1999-ல் துவக்கப்பட்டது.
இது இந்தியாவில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களின் உச்ச அமைப்பாகும். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 230 நகரங்களில் செயல்பட்டு வரும் கிரெடாய் அமைப்பில் மொத்தம் 13,300 உறுப் பினர்கள் உள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த அமைப்பின் தலைமையகம் சென்னையில் உள்ளது. சென்னை தவிர இதன் மண்டல அலுவலகங்கள் கோயம் புத்தூர், மதுரை, திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி, தர்மபுரி, ஓசூர், சேலம் ஆகிய இடங்களில் செயல் பட்டு வருகின்றன.



