நீலகிரி மாவட்டம் உதகை ஜெ.எஸ்.எஸ் மருந் தாக்கியல் கல்லூரியில் இரண்டு நாள் நூலக கருத்தரங்கம் நடைபெற்றது.
ஜெ.எஸ்.எஸ் கல்லூரி.முதல்வர் முனைவர் எஸ்.பி. தனபால் வரவேற்றார்.
பாரதியார் பல்கலைகழக நூலகர் முனைவர் சாரங்க பாணி ,முனை வர்கள் சுனில், சந்திர சேகர் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
சிறப்பு அழைப்பாளர் மைசூர் பல்கலைக்கழக முன்னாள் நூலகர் முனை வர் ரமேஷ் கருத்துரை வழங்கினார்.
கருத்தரங்கின் செயலா ளரும் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி நூலகருமான சைலேந்திர குமார் கருந்தரங்கின் செயல் பாட்டை விளக்கினார்.
ஜெ.எஸ்.எஸ் மருத்துவக் கல்லூரி நூலகர் ஷோபா நன்றி கூறினார்.
நாடுமுழுவதிலும் இருந்து 50-க்கும்மேற்பட்ட நூலகர்கள் கலந்து கொண் டனர். கருத்தரங்களில் பல்வேறு கலந்தாய்வுகள், சொற் பொழிவுகள் கருத்து ரைகள் இடம்பெற்றன.
இணைய நூலகம், நூலக கொள்கைகள், மின்னிதழ்களின் சந்தாக்கள், மின்புத்தகம் மற்றும் இணைய ஆராய்ச்சியின் பயன்கள் என நூலகம் சார்ந்த தகவல்களை பற்றிய உரையாடல்கள் நடைபெற்றன
இது போன்ற கருத்தரங் கிலோ வகுப்பறையிலோ உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் ஒன்றை சொல் தந்துவிடும். அதற்காக காத்திருந்து உள்வாங்கி கொள்ள வேண்டும்.
நூலகத்துக்கு போகாதவர்கள் அறிஞர் ஆக முடியாது. வாசிப்பு சுவாசிப்பு போன்றது உயர் வாழ்வதற்கு அவசியமானது என விரிவுரையாளர்கள் கருத்துரை வழங்கினர்.
பங்கேற்ற அனைவருக்கும் சானறிதழ்கள் வழங்கப்பட்டன.



