காவேரி மருத்துவமனை குழுமம், சென்னையில் தனது இரண்டாவது மருத்துவமனையை, கோவிலம்பாக்கம் ரேடியல் சாலையில் தொடங்கியது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
250 படுக்கை வசதி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை அனைத்து வயதினருக்கும் தேவையான நவீன மருத்துவ வசதி களை கொண்ட ஒரு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக உருவாக் கப்பட்டிருக்கிறது.
மூளை – நரம்பியல், தண்டுவட பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, குடல் இரைப்பை பிரிவு, சிறுநீரக பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு, விபத்து மற்றும் அவசரநிலை சிகிச்சை பிரிவு, ஆகிய பிரிவுகளில் உயர்தர சிறப்பு மையங்களை (Centers of Excellence) ) 24/7 வழங்க உள்ளது.
75 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, 20 படுக்கை வசதிகள் கொண்ட பச்சிளம் குழந்தைகளுக்கான (NICU) சிறப்பு பிரிவு, நவீன கேத் லேப் மற்றும் அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்களைக் கொண்டுள்ளது.
நோயறிதலுக்கான துல்லியமான திறன்களைக் கொண்ட 3-டெஸ்லா எம்ஆர்ஐ மற்றும் 128-ஸ்லைஸ் சிடி உட்பட நவீன இமேஜிங் சேவைகளை 24 மணி நேரமும் இம்மருத்துவமனை வழங்குகிறது. இம்மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
காவேரி மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் எஸ். சந்திரகுமார் கூறும்போது, புதிய மருத்துவமனையை தொடங்குவதன் மூலம் தென்சென்னையில் வாழும் மக்களுக்கு எமது சேவையை இலகுவாக தொடர முடியும் என்றார்.
‘எங்களின் 20 ஆண்டுகளுக்கு மேலான மருத்துவ சேவையில் ஒவ் வொருவருக்கும் கனிவான கவனிப்பு, சிறந்த பாதுகாப்பு மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்குவதில் உறுதி கொண்டுள்ளோம்’ என்று காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ். மணிவண்ணன் குறிப்பிட்டார்.



