பொருளாதார அறிஞரும், வரலாற்று ஆசிரியரும், சமூகவியலாள ரும், சோசலிச புரட்சியா ளருமான காரல் மார்க்ஸ் 205வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
கரூர் அடுத்த தாந்தோணி மலை பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடந்தது. இந்திய கம்யூ னிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் ஜோதி பாசு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, ஜீவானந்தம், மாநில குழு உறுப்பினர் பாலா, மாநகர செயலாளரும், மாநகராட்சி உறுப்பினருமான தண்ட பாணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறப்புரை
இந்த கருத்தரங்க கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, காரல் மார்க்சை பற்றி குறிப்பிடும் போது, மனிதகுலம் உள்ளவரை கார்ல் மார்க்சை மறக்க முடியாது என தெரிவித்தார்.
அதற்குக் காரணம் அவரது இனமோ, மொழியோ தேசியமோ எதுவுமே கிடையாது. இதற்கெல்லாம் அப்பாற் பட்டவர் தான் காரல் மார்க்ஸ் என்றார்.



