வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸின் ஓர் அங்கமான ‘வெராண்டா ரேஸ்’, சென்னையில் தனது 11-வது வெற்றிக்கூட்டத்தைக் கொண்டாடியது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல நடி கரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் கலந்து கொண்டார்.
சுரேஷ் கல்பாத்தி (நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர்), பரத் சீமான் (வெராண்டா ஐ.ஏ.எஸ். தலைமை நிர்வாக அதி காரி, சென்னை ரேஸ் நிறுவனர்), சந்தோஷ் குமார் (வெராண்டா ரேஸ் தலைமை நிர்வாக அதிகாரி) ஆகியோர் அடங்கிய தலைமைக் குழு கொண் டாட்டத்தின்போதுகூடியிருந்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) சமீபத்தில் அ விக்கப்பட்ட குரூப் 4 தேர்வு முடி வுகளில், வெராண்டா ரேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 458 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்தரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற வங்கி மற்றும் எஸ்.எஸ்.சி (SSC)தேர்வுகளை பொறுத்தவரையிலும், வெராண்டா ரேஸ்லிருந்து 1200 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
‘வெராண்டா ரேஸ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயிலும் மாணவர்களுக்கு சிறந்த போட்டித் தேர்வு பயிற்சி மற்றும் தேர்வு உத்திகளை வழங்கி அவர்களை வெற்றியடைய வைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
துறை ரீதியான அனுபவம் பெற்ற ஆசிரியர்களாலும் மற்றும் அதிநவீன வசதிகள் மாணவர்கள் தங்கள் முழுத்திறனை அடையவும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன’ என்று பரத் சீமான் கூறினார்.
வெராண்டா ரேஸ் கடந்த மாதம் சேலம், கோவை, மதுரை மற்றும் திருவனந்தபுரத்தில் வெற்றிக்கூட்டத்தை கொண்டாடியது.



