கே.1788 நரசீபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF/MSC) திட்டத்தின் மூலம் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் பொட்டலமிட்டு விற்பனை செய்யும் மையம் துவக்கி வைக்கப்பட்டது.
மையத்தின் முதல் விற்பனையினை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் எஸ்.பார்த்தீபன் துவக்கி வைத்தார்.
தொண்டாமுத்தூர் வட்டார தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க செயலாளர்கள் முதல் விற்பனையினை பெற்றுக் கொண்டார்கள்.
கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் கே.ஆர்.விஜயகணேஷ், கள அலுவலர் கே.முத்துக்குமார், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேற்பார்வையாளர் எம்.ஹரிஹரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
நரசீபுரம் கடன் சங்கத் தலைவர் ஆர்.நடராஜன், துணைத் தலைவர் எஸ்.தர்ஷன், சங்க நிர்வாகக்குழு இயக் குநர்கள் மற்றும் சங்கச் செயலாளர் கே.நடராஜ் மற்றும் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



