நீலகிரி மாவட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலக கூட் டரங்கில் கோடை விழாவை முன்னிட்டு தேயிலை சுற்றுலா திருவிழா 2023 தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் சா.ப.அம் ரித் முன்னிலை வகித்தார்.
தேயிலை வாரிய செயல் இயக்குநர் முனைவர் மு.முத்துக் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:
நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ள காரணத்தினால் ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக் கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இவ்வாண்டு நீலகிரி மாவட் டத்தில் சுற்றுலா பயணி களுக்கு தேநீர் குறித்து பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச தேயிலை தினத்தின் ஒரு பகுதியாக 21.05.2023 அன்று தேயிலை விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேயிலை கலப்படத்தை தடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேநீர் காய்ச்சும் போட்டி நடத்தவும், உதகை தாவரவியல் பூங்கா, தொட்ட பெட்டா தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் பிற இடங்களில் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் தயாரிக்கும் சிறப்பு தேயிலை வகைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
தேநீர் கண்காட்சி
மேலும், சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கும் வகையில் இவ்வாண்டு; 22.05.2023 அன்று குன்னூர் சிம்ஸ்பூங்காவில் தேநீர் கண்காட்சி நடத்தவும், சுற்றுலா பயணிகளிடையே தேயிலை உற் பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேயிலை தொழிற்சாலைகளை பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, தேயிலை சுற்றுலா திருவிழா மிகச் சிறப்பான முறையில் நடத்திட, மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றார்.
சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர் மோனிக் காரானா, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) துரைசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷிபிலாமேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தேயிலை வாரிய உதவி இயக்குநர் ஆர்.செல்வம், குன்னூர் தேயிலை வாரியத்தின் வளர்ச்சி அலுவலர் டாக்டர் ஆர்.உமாமகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிபித்தா, குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



