fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா, கல்லூரி வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்லூரி உதவி பேராசிரியர் ஆர்.பிரவீன் வரவேற்றார்.

முதல்வர் முனைவர் கா.ரா.ராமசாமி கல்லூரி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:
சீர்மிகு சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது.

ஆசிரியர்கள் நேர்மையுடனும் கண்ணியத் துடன் நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் பயிற்சி காலத்தில் நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். மாணவரிடம் ஒழுக்கப்பண்புகள் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர் கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.கீதா பேசும்போது, பயிற்சி ஆசிரியர்கள் தற்காலத் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ற கற்பித்தல் நுட்பங்கள் முறையாகக் கற்று கொண்டு வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும். பாட அறிவு நல்லொழுக்கத்துடன் கூடிய ஆசிரியர்களாகவும் திகழ வேண்டும் என்றார்.

உடற்கல்வி இயக்குநர் முனைவர் எஸ்.சுசாதா விளையாட்டு விழா அறிக்கை வாசித்தார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, அறங்காவலர் டாக்டர் அருண் என்.பழனிசாமி, தொழில் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் மதுரா வி.பழனிசாமி, முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் ழு.வு.புவனேஸ்வரன், முனைவர் ஆ.நடேசன், என்.ஜி.பி. கல்வி குழுமத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி முதல்வர்கள், புல முதன்மையர்கள் பங்கேற்றனர்.

இக்கல்வியாண்டில் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-ஆசிரியர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் கோப்பையை இரண்டாம் ஆண்டு மாணவர் எம்.யோக பாலாஜி, பெண்களுக்கான தனிநபர் கோப்பையை இரண்டாம் ஆண்டு மாணவி ஜி.ஆலிஸ் ஜோஸ்பின்ஆகியோர் பெற்றனர்.

வளாகத் தேர்வில் பல்வேறு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலை வர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார். உதவி பேராசிரியர் பி.தாமரைக்கண்ணன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img