Homeபிற செய்திகள்ஜே மேக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் கோவையில் அறிமுகம்

ஜே மேக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் கோவையில் அறிமுகம்

பட்டன் மொபைல் போன் தயாரிப்பாளரான ஜே மேக்ஸ் நிறுவனம் தனது தனது புதிய வரவாக ஸ்மார்ட் வாட்ச், நெக் பேண்ட், பவர் பேங்க் உள்ளிட்ட அக்சரீஸ்களை கோவையில் அறிமுகப்படுத்தியது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் ஜே மேக்ஸ் மொபைல் நிறுவனம் குறைந்த விலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புதிய கீ பேட் மொபைல் போன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் தனது விற்பனை சேவையை துவங்கி ஒரு வருடம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, ,ஜே மேக்ஸ் நிறுவனம் தனது புதிய மொபைல் அக்சரீஸ் அறிமுக விழாவை கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடத்தியது.

இதில் ஜே மேக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் ஆனந்த்யா கோஸ்,தலைமை செயல் அதிகாரி கினிஷ் மாகோ,தேசிய விற்பனை மேலாளர் ராஜேஷ் சிங் தமிழக மண்டல மேலாளர்கள் மருதாசலம் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

ஜே மேக்ஸ் மொபைல் நிறுவனம் கடந்த மூன்று வருடங் களாக லட்சக்கணக்கான வாடிக் கையாளர்களை கொண்டுள்ள தாகவும், தற்போது இந்திய அளவில் விற்பனையை விரிவு படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.குறைந்த விலையில் தரமான மொபைல் போன்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதை முக்கிய குறிக்கோளாக பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

அக்சரீஸ் பொருட்கள்

தற்போது ஜே மேக்ஸ் இன் புதிய வரவாக ஸ்மார்ட் வாட்ச்,நெக் பேண்ட்,பவர் பேங்க்,இயர் பட்ஸ்,போன்ற அக்சரீஸ்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.ஜே மேக்ஸ் மொபைல் மற்றும் அக்சரீஸ் பொருட்கள் ஆன்லைன் தளங்களிலும் கிடைப்பதாகவும், எளிமையாக அனைத்து தரப்பினரும் கையாளும் வகையில் எங்களது நிறுவனத்தின் மொபைல் போன் இருப்பதாக குறிப்பிட்டனர். இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் கிளை மேலாளர்கள் பிரபு,ராஜ்குமார் ஆகி யோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img