fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சர்வதேச பருத்தி கவுன்சில் கருத்தரங்கு

கோவையில் சர்வதேச பருத்தி கவுன்சில் கருத்தரங்கு

கோவை, ரேஸ்கோர்ஸ் தாஜ் விவான்டா ஓட்டலில் ‘அமெரிக்க பருத்தி மூலம் உச்ச செயல்திறனை அ¬ டதல்’ என்னும் தலைப்பில் சர்வதேச பருத்தி கவுன்சில் சார்பில் கருத்தரங்கு நடந்தது.

இந்த கருத்தரங்கில் முன்னணி இந்திய ஜவுளி ஆலைகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மற்றும் பருத்தி தொழில் சார்ந்த வர்த்தக கூட்டு நிறு வனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவையில் நடைபெறும் இந்த கருத் தரங்கை தொடர்ந்து 26ம் தேதி (இன்று) லூதியானாவில் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கில் பங்கேற்ற அமெரிக்காவின் பருத்தி தொழில்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் உலக அளவில் பருத்தி தொடர்பாக நிலவும் சூழல், அமெரிக்க பருத்தி குறித்த விவரங்கள் மற்றும் உலகளாவிய தளவாட நிலைமை ஆகியவை குறித்து பேசினார்கள்.

சுபிமா திட்டம்

இந்த கருத்தரங்கில் அதிக நீளமுள்ள பருத்தியின் மிகப்பெரிய நுகர்வோரான இந்திய ஆலைகளுக்கு சுபிமா திட்டத்தில் பல்வேறு புதிய விஷயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டன.

இந்த கருத்தரங்கின் சிறப்பு அம்சமாக பருத்தி சம்பந்தமாக பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில் தெற்காசியா விற்கான காட்டன் யுஎஸ்ஏ சப்ளை, சர்வதேச பருத்தி கவுன்சில், இயக்குநர் வில்லியம் பெட்டன்டோர்ப், சுபிமா தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் லெவ்கோவிட்ஸ், இந்திய மற்றும் இலங்கைக்கான சர்வதேச பருத்தி கவுன்சில் பிரதிநிதி பீஷ் நரங்க் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img