fbpx
Homeபிற செய்திகள்அரசு மீன் பண்ணைகள் செயல்பாடு தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு மீன் பண்ணைகள் செயல்பாடு தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நீர்வள நிலவளத் திட் டத்தின் கீழ் ரூ.400 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு மீன் பண்ணையின் செயல்பாடுகள் குறித்து நேற்று (ஏப்.19) மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிப்ட் திலேப்பியா (GIFT Tilapaia) மீன் குஞ்சு பொரிப்பகப் பணி, இந்தியப் பெருரக கெண்டை மீன் குஞ்சு வளர்ப்புப் பணி, கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு பொரிப்பக தொழில்நுட்பங்கள், இதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறும் பயன்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.

விற்பனை செய்யும் முறைகள்

பெரியகுளம் வட்டத்திற்கு உட் பட்ட எ.புதுப்பட்டி கிராமத்தில் சி.எஸ்.எஸ்.நீலப்புரட்சித் திட்டத் தின் கீழ் ரூ.25 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்புப் பண்ணையின் செயல்பாடுகள், பயனாளிகளிடம் அலங்கார மீன் வளர்ப்பு மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் மற்றும் மீன்களை விற்பனை செய்யும் முறைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.

பெரியகுளம் வட்டத்திற்கு உட்பட்ட சில்வார்பட்டியில் செய ல்பட்டு வரும் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ஆண்டிபட்டி வட்டத்திற்கு உட்பட்ட மரிக்குண்டு கிராமத்தில் உதவி இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் மூலம் உடைகல் மற்றும் கிராவல் வெட்டி எடுப்பதற்கு குவாரி குத்தகை உரிமம் பெறப்பட்டதற்கான காலம், இதுவரை எடுக்கப்பட்டவை அரசு விதிமுறைப்பட்டு எடுக்கப் படுகிறதா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் டி.வினோத், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ந.பஞ்சராஜா, மீன்வள ஆய்வாளர்கள் ஆ.மா.கௌதமன், ஜெ.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img