fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.90 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.90 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி ஊராட்சியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேற்று (ஏப்.19) செய் தியாளர்களுடன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

வகுரம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு ரூ.24.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டும் பணி நடக்கிறது. இதனை ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

வகுரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.4.49 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட் டத்தின் கீழ் ரூ.3.18 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி 2-வது தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் ஆட்சியர்ஆய்வு செய்தார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.53 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.72 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி சமத்துவ மயானத்தில் மயான மேடை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

சிங்கிலிப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது பொதுமக்களிடம் களம் அமைக் கப்பட்டுள்ளதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். சிங்கிலிபட்டியில் ரூ.5.72 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும், ரூ.12.61 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினையும் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.

நேதாஜி நகரில் 15-வது நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.32 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.92 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார் ஆட்சியர்.

ஆய்வின்போது நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார், .பாஸ்கர், ஊராட்சி மன்றத்தலைவர் ராஜாரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img