fbpx
Homeபிற செய்திகள்எல்ஜி நவீன கம்ப்ரஸ்டு ஏர் சொல்யூசன் ஹானோவர் மெஸ்ஸில் அறிமுகம்

எல்ஜி நவீன கம்ப்ரஸ்டு ஏர் சொல்யூசன் ஹானோவர் மெஸ்ஸில் அறிமுகம்

உலகின் முன்னணி ஏர் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றான ணிலிநிவீ ஆயில்-ஃப்ரீ, ஆயில்-லூப்ரிகேட்டடு கம்ப்ரசர்-கள் மற்றும் குறைந்த லைஃப் சைக்கிள் செலவிலான கம்ப்ரஸ்டு ஏர் சொல்யூசன்-களுக்கான போர்ட்ஃபோலியோ-வை ஹானோவர் மெஸ்-ஸில் வெளியிட்டது.

கண்காட்சி

ஹால் 4-ல், உள்ள எல்ஜி ஸ்டாண்ட் ஞி31-இல் அமைக்கப்பட்ட கண்காட்சியில், எல்ஜி யின் ஒரு ஒருங்கிணைந்த வெப்ப மீட்பு அமைப்புடன் கூடிய ஆயில்-ஃப்ரீ ஸ்க்ரூ ஏர் கம்ப்ரஸர் மற்றும் ஒரு புதிய நிரந்தர மேக்னட் சிங்க்ரனஸ் மோட்டார்-உடன் கூடிய மேம்படுத்தப்பட்ட செயல் திறன் கொண்ட ஆயில்-லூப்ரிகேட்டடு ஸ்க்ரூ கம்ப்ரசர் ஆகியவை உள்ளன. எல்ஜியின் முதலாவதான டூ-ஸ்டேஜ் ஆயில்-லூப்ரிகேட்டடு ஸ்க்ரூ ஏர் கம்ப்ரசர் இக்கண்காட்சியில் பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ளது.

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில், ஹானோவர் மெஸ்ஸி-இல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள எங்கள் போர்ட்ஃபோலியோ-ஆனது, ஆற்றல் சிக்கனத்தில் ஒரு படிமுறை மாற்றத்திற்கான வாடிக்கையாளர்களின் தேவைகளுக்குச் செவிசாய்ப்பதில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்கும் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

நிலைத்தன்மை மற்றும் நிகர பூஜ்ஜிய செயல்பாடுகளை நோக்கியப் பயணத்தில், குறைந்த ஆற்றல் நுகர்வு முதல் முழுமையான லைஃப் சைக்கிள் செலவு மதிப்பீடுகள் வரையிலான வாடிக்கையாளர் தேவைகள் வளர்ந்து வருகின்றன.

ஏர் கம்ப்ரசர்கள்-ஆனது, ஐரோப்பாவின் ஒட்டுமொத்த தொழில்துறை மின்ஆற்றல் தேவையில் தோராயமாக 10%-ஐ நுகரும் அதே வேளையில், ஒரு கம்ப்ரசர்-இன் லைஃப் சைக்கிள் செலவில் 70% க்கும் அதிகமானவை செயல்பாட்டின் போது பயன்படுத்தப்படும் ஆற்றலால் ஏற்படுகிறது என்றார்.

எல்ஜி கம்ப்ரசர்ஸ் யூரோப்-இன், தலைவர் க்ரிஸ் ரிங்ஸ்டெட்டர் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் ஆற்றல் செலவுகள், ஒழுங்குமுறை மற்றும் குறைந்த உமிழ்வு களுக்கான மதிப்புச் சங்கிலி கோரிக்கைகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான தேவை, அதிமுக்கியமாக ஆற்றல் சிக்கனம் ஆகியவற்றில் இடையறாத அதிகரிப்பை எதிர்கொள்வதால், அவர்களுடன் கூட்டுசேர்வதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img