கோவை மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படுவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து அரசு துறை அலுவலர் களுடனான ஆலோச னைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நேற்று (ஏப்.17) நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசுப் பொருட்காட்சி, கோவை மாநக ராட்சி, சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கப்பட்டு, 45 நாள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இப்பொருட்காட்சியில் செய்தி – மக்கள் தொடர்புத்துறை, வருவாய்த் துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப் பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுற்றுலாத்துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுச் சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன் வளத்துறை ஆகிய 27 அரசுத் துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செயல்படுத் தப்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
தமிழ்நாடு மின்சாரம் வாரியம், கோவை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கோ-ஆப்டெக்ஸ், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய 7 அரசு சார்பு நிறுவனங்களும் இப் பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்கவுள்ளன.
அரசு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்கள் துறையால் மேற் கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களை காட்சிப்படுத்தும் வகையிலும் சிறப்பான அரங்குகளை அமைக்க வேண்டும்.
இப்பொருட்காட்சியில் சிறப் பாக அரங்குகள் அமைக்கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் மற்றும் ஆறுதல் பரிசும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோரால் வழங்கப்படவுள்ளது.
அரசுப் பொருட்காட்சியில் மூலம் தமிழ்நாடு அரசின் திட் டங்களை அறிந்துகொள்வது மட்டுமின்றி, கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோ கப்பொருட்களுடன்கூடிய பல் வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன.
தினசரி மாலை 4 முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெறும் சிறைச்சாலை அணிவகுப்பு மைதானம் வழியாக பேருந்துகள் செல்லும் வகையில் கூடுதல் பேருந்து சேவை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.
கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், வரு வாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், தனித் துணைஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் சுரேஷ், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து) சிற்றரசு, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.சந்திரா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அருணா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (புவனேஸ்வரி), பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரமணகோபால் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில்அண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



