fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியல் கல்லூரியில் அலுமினியம் மறுசுழற்சி தேசிய பயிலரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியல் கல்லூரியில் அலுமினியம் மறுசுழற்சி தேசிய பயிலரங்கம்

கோவை துடியலூர் வட்டம் மலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், அலுமினிய உலோக கலவைகளின் செயலாக்கம், குணாதிசயங்கள் மற்றும் பயன்பாடு சுழற்சிமுறை – பொருளாதாரத்தை நோக்கி அணுகுமுறை என்ற தலைப்பில் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் என் ஆர் அலமேலு வரவேற்றார்.

எஸ் .என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் முதன்மை செயல் அலுவலர் சி.வி ராம்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, புதுடெல்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி, மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றப் பிரிவின் தலைவர் டாக்டர் அனிதா அகர்வால் பயி லரங்கைத் தொடங்கி வைத்து , சமூகப் பிரச்சனைகளுக்கு வலுவான தீர்வுகளை உருவாக்கி, ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதர வளிக்க, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை எடுத்த முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை ஸ்பான்சர் செய்யப்பட்ட திட்டங் களின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய தொழில்நுட்ப பிரச்சனைகளை வெளிப்படுத்த, தொழில்துறை யினர் முன் வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இப் பயிலரங்கம், புது டெல்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத்தை செயல் படுத்தும் மையத்தின் உதவியு டனும், கொடிசியா மற்றும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தி யன் பவுண்டரிமென் உறுதுணையுடன் நடைபெற்றது .

இக் கல்லூரியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் கல்லூரியின் சார்பில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே புதிய நவீன அலுமினிய மறுசுழற்சி இன்குபேஷன் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

மறுசுழற்சி

இதன் தொடர்ச்சியாக, இந்த பயிலரங்கத்தின் மூலம், தொழில் துறை பயன்பாட்டுக்கான மாசு பட்ட அலுமினிய ஸ்கிராப் களை மறுசுழற்சி மற்றும் மறு செயலாக்கம் செய்து தரப்ப டுத்தப்பட்ட அலுமினிய பொருட்களாக மாற்றுவதற்கான தொழில் நுட்பங்களை கண் டறிதல், உருகு சுத்திகரிப்பு நடைமுறைகளை உருவாக்கி மறுசுழற்சியில் சுவடு கூறுகளின் விரும்பத்தகாத கலவைகளை கண்டறிய யுக்திகள், உலோகம் மாதிரிகளின் மெக்கானிக்கல் மற்றும் உலோகவியல் தன்மை கண்டறிதல் என பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்கப் பட்டது

முக்கிய பேச்சாளர்கள்களாக புதுடெல்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி டாக்டர் கிருஷ்ண காந்த், பெங்களூரு மத்திய உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் டாக்டர் நாகஅனுமையா, ஜாம்ஷெட்பூர் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தேசிய உளவியல் ஆய்வக தலைமை விஞ்ஞானி டாக்டர் சஞ்சய் குமார், ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாட்டு மற்றும் வடிவமைப்பு மைய மூத்த முதன்மை விஞ்ஞானி ஆர். என் சௌகான்,, திருவனந்தபுரம், சி.எஸ்.ஐ.ஆர் முதன்மை விஞ்ஞானி ராஜன், சென்னை அண்ணா பல்கலைகத்தின் டாக்டர் திருமால் அழகன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் பா கருப்பசாமி, இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இணை பேராசிரியர் முனைவர் பாக்கியநாதன் கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ் அலுமினிய பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்ட தொழில்துறையினர், கொடிசியா, இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியன் பவுண்டரிமென், எல். அண்ட். டி, ஆல்பா கிராப்ட் ஷார்ப் இண்டஸ்ட்ரீஸ் போன்ற தொழில் நிறுவன மேலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img