fbpx
Homeபிற செய்திகள்சேலம் ஸ்ரீகோகுலம் மருத்துவமனையில் மூளை, நரம்பு நோய்களுக்கு சிறப்புப் பிரிவு திறப்பு

சேலம் ஸ்ரீகோகுலம் மருத்துவமனையில் மூளை, நரம்பு நோய்களுக்கு சிறப்புப் பிரிவு திறப்பு

சேலம் மற்றும் சுற்றி யுள்ள மாவட்டங்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன மருத்துவத்துறையில் முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை, மூளை மற்றும் நரம்பு நோய்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவினை துவக்கியுள்ளது.

இது குறித்து மருத்துவர் அர்த்தனாரி செய் தியாளர்களிடம் கூறியதாவது:
மூளை ரத்தக்குழாய் அடைப்பு அல்லது ரத்தக் கசிவு காரணமாக ஏற்படும் பக்கவாதம் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோய் சுய நினைவு இழப்பு, மூளை ரத்த நாள முடிச்சுகளால் ஏற்படும் தீரா தலைவலி, மூலை காய்ச்சல், தலை காயங்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்த மாறு பாடுகளால் ஏற்படும் மூளை கோளாறுகள் போன்றவற்றிற்கான தீவிர சிகிச்சைகள் இப் பிரிவில் அளிக்கப்படுகின்றன.

மூளை மற்றும் நரம்பு களின் செயல்பாடு மற்றும் நோய்களை கண்டறிய உதவும் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ஆஞ்சியோகிராம், மூளை மற்றும் தசை மின்னலை வரைவு போன்ற நவீன வசதிகளும் மூளை ரத்தக் குழாய் உள்நோக்கி ஆய்வகமும் ஒருங்கி ணைந்து இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

நவீன வசதிகள்

இப்பிரவில் உயிர்காக் கும் செயற்கை சுவாச கருவிகள் மூளை உள் அழுத்த கண்காணிப்பு கருவிகள் கரியமில வாயு அளிக்கும் கருவிகள், ரத்த சுத்தகரிப்பு மற்றும் மூளை மின்னலை வரைவு போன்ற நவீன வசதிகள் உள்ளன.

சிறப்பு சேர்க்கும் வகையில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச் சைக்கென்றே பிரத்யேக அதிநவீன மைக்ரோஸ்கோப் கொண்ட அறுவை அரங்குகள் உள்ளன.

பக்கவாதத்தில் ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் (கோல்டன் ஹவர்) மருத்துவமனையை அணுகி முறையான சிகிச்சை பெறும் போது முற்றிலும் குணமாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றார்.

மருத்துவர்கள் ஜெயதேவ், ராஜேஷ், புனித், பழனிச்சாமி, செந்தில் நாதன், ராஜ்குமார், சுப்பிரமணியம், மோகன், ஹரிஹரசுதன், தரணீஸ்வரன் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img