Homeபிற செய்திகள்கோவை ராமநாதபுரம் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

கோவை ராமநாதபுரம் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி கத்தீட்ரலில் ஈஸ்டர் தின ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இரவு 10.00 மணிக்கு உயிர்த்த இயேசுவின் திரு சுரூபம் கையில் ஏந்தி கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் Dr.ஷீ.பால் ஆலப்பாட் தலைமையில் தேவாலயத்தை சுற்றிலும் பவனி நடை பெற்றது. தொடர்ந்து நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது

திருப்பலியில் பங்கு தந்தை அருட்திரு ஜோசப் புத்தூர், உதவி பங்கு தந்தை அருட்திரு பிரபாத் எழுவந்திங்கல் சிவிமி, டீக்கன் பிரதர் ப்ராங் கண்ணநாயக்கல் மற்றும் டீக்கன் பிரதர் விபின் ஆகியோர் உதவி குருக்களாக பங்குபெற்றனர்.

இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். திருப்பலியின் போது ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது ஈஸ்டர் வாழ்த்துக் களை தெரிவித்து மகிழ்ந்தனர். ஈஸ்டர் தின கொண்டாட்ட நிகழ்வுகளை தேவாலயத்தின் அறங்காவலர்கள் மேற்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img