fbpx
Homeபிற செய்திகள்சிறு வணிகங்களுக்கான க்ரோ-எக்ஸ் பயன்பாடு யு க்ரோ கேபிடல் அறிமுகம்

சிறு வணிகங்களுக்கான க்ரோ-எக்ஸ் பயன்பாடு யு க்ரோ கேபிடல் அறிமுகம்

தரவு தொழில்நுட்ப என்.பி. எஃப்.சி மற்றும் இந்தியாவில் ஒரு சேவையாக கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள யு க்ரோ கேபிடல் எம்.எஸ்.எம்.இ.களுக்கான யு.பி.ஐ.யில் கிரெடிட் லைனில் க்ரோ எக்ஸ் பயன்பாட்டை அறிமுகப் படுத்துவதாக அறிவித்தது.

இந்தியா வில் உள்ள 63 மில்லியனுக்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ.க்கள் இன்று 110 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

இருப்பினும், சரியான நேரத்தில் கடன் கிடைக்காதது அவர்களின் திறனை உணரவிடாமல் தடுக்கிறது. யு க்ரோ கேபிடல் எல் நிறுவ னத்திடமிருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட, க்ரோன் எக்ஸ் பயன்பாடு எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு நெகிழ்வான மற்றும் மலிவு கடன் வழங்க தரவு பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சிறிய வணிக கடன் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

யு க்ரோ கேப்பிட்டலின் தலைமை வருவாய் அதிகாரி அமித் மாண் டே கூறியதாவது: யு க்ரோ எக்ஸ் முன்மொழிவு எங்கள் தரவு பகுப்பாய்வு திறன்கள் மற்றும் கேஷ்ஃப்ளோ ஆதரவு இடர் மதிப்பீட்டு முறையைப் பயன்படுத்தி எம்.எஸ்.எம். வகை தொழில்களுக்கு உடனடி குறுகிய கால கடன் வரம்புகளை வழங்குகிறது. எம்.எஸ்.எம்.இ.க்கள் இந்த கடனை யுபிஐ மூலம் வழங்கலாம்.

பணம் செலுத்தலாம் மற்றும் நிதி பயன்படுத்தப்படும் நேரத்திற்கு மட்டுமே வட்டி செலுத்தலாம். இது மலிவான மற்றும் வெளிப்படையானதாக அமைகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img