fbpx
Homeபிற செய்திகள்கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்

தமிழக முதலமைச்சர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தினை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். இந்த தானியங்கி இயந்திரத்தில் ரூபாய் 10 நாணயமாகவோ, பத்து ரூபாய் நோட்டாகவோ, அல்லது இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களையோ செலுத்தினால், அந்த இயந்திரத்தில் இருந்து தானாக மஞ்சள் பை வெளியே வரும். அதனை பொதுமக்கள் பெற்று பயன் அடையலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஜெயலட்சுமி, தனி துணை ஆட்சியர் சைபுதீன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img