முத்தரையர் சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு முத்தரையர் சங்க கூட்டத்தில் மாநில தலைவர் அம்பலத்தரசு வலியுறுத்தினார்.
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் உள்ள தனியார் அரங்கில் மாநிலத் தலைவர் அம்பலத்தரசு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் குப்புசாமி, மாவட்ட தலைவர் அரசு, மாவட்ட செயலாளர் பொய்யாமணி உள்ளிட்ட மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு முக்கிய முடிவுகளை மேற்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் அம்பலத்தரசு பேசியதாவது: சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்துக்கு தலைமை சங்கம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டி டத்தை திறக்க முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும், முத்தரையர் சங்க எம்எல்ஏ, அமைச்சர் மற்றும் முக்கிய அனைத்து கட்சி பிரமுகர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முத்தரையர் சமூகத் தினருக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
1996 ஆம் ஆண்டு முத்தரையர் சமூகத்தை சேர்ந்த 29 பிரிவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட அரசாணை கிடப்பில் உள்ளது. அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
எம்.பி.சி, டி.என்.டி, பி.சி ஆகிய தனித்தனி பிரிவுகளாக முத்தரையரை பிரிக்காமல், ஒரே பிரிவாக இணைக்க வேண்டும். முத்தரையர் சமூகத்தினரை மிகவும் பிற்பட்ட வகுப்பினராக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்துள்ளோம். இவ்வாறு அவலல் தெரிவித்தார்.



