Homeபிற செய்திகள்கோவை ஆர்ய வைத்யா பார்மசியில் மகப்பேறு, குழந்தை பராமரிப்பு மையம் துவக்கம்

கோவை ஆர்ய வைத்யா பார்மசியில் மகப்பேறு, குழந்தை பராமரிப்பு மையம் துவக்கம்

ஜனனி என்ற பெண்கள் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான ஆர்ய வைத்யா பார்மசியின் முயற்சியை ஹெல்த் பேசிக்ஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்வாதி ரோஹித், கோவை ஆர்ய வைத்யா பார்மசியின் நிர்வாக இயக்குநர் சி.தேவிதாஸ் வாரியர், இயக்குநர் கிருஷ்ணதாஸ் வாரியர் ஆகியோர் கோவை, ராமநாதபுரத்தில் உள்ள ஆயுர்வேதிக் டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி வைத்தனர்.

ஏ.வி.பி குழும நிறுவனங்கள், புதிய தாய்மார்கள் மற்றும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சரியான கவனிப்புடன் உதவுவதற்காக நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு கிளினிக்குகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஜனனி கிளினிக் தொடங்கப் பட்டுள்ளது.
ஆயுர்வேத பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு திட்டம் – ஜனனி என்பது ஒரு விரிவான திட்டமாகும். இது தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு ஆரோக்கியமான மீட்சியை உறுதி செய்வதோடு, அவர்களின் மகப்பேறு காலத்தில் அவர்களுக்கு வழிகாட்டும் ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“ஜனனி”

தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வாதி ரோஹித் கூறியதாவது:
ஜனனி மையம், பிறப்பு முதல் பிரசவம் மற்றும் தாய்மை வரை கர்ப்பத்தின் மகப்பேறு காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் தாய்மார்களுக்கு ஆதரவாக இருக்கும். மன அழுத்தம் இல்லாமல் இனிமையான பயணத்தை மேற்கொள்வதற்கு இந்த மகிழ்ச்சியான கட்டத்தில் தாய்மார்களுக்கு கவனிப்பும் வழிகாட்டுதலும் இருப்பது முக்கியம்.

கர்ப்ப காலம் முதல் குழந்தை பெறுதல் வரை ஆதரவை வழங்குவதன் மூலம், பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இந்த உன்னதமான முயற்சியான “ஜனனி” புரட்சிகரமான மருத்துவத் துறையில் பாதையை வகுத்துள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img