நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொகுதிக்குட்பட்ட காரமடை பகுதியில் முடிவுற்ற பல்வேறு நல திட்டங்களை தொடங்கி வைத்தார் மேலும் பல லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேட்டுப்பாளையம் அடுத்த கார மடை பகுதியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் நீலகிரி எம்பி ஆ.இராசா பல்வேறு முடிவுற்ற நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதில் ஒரு பகுதியாக காளட்டியூர் பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தார். தொடர்ந்து கருப்பராயன் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தார்.
அடிக்கல்
மேலும் காளம்பாளையம் விஜய நகரம் பகுதியில் 17.65 லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதேபோல் தோலம்பாளையம் நீலாம்பதி பகுதியில் ரூ.6.40 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் சாலை, ரூ.3.67 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல், ரூ.2.92 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் சாலை மற்றும் வடிகால் அமைத்தல்,11.68 லட்சம் மதிப்பிலான புதிய நியாய விலை கடை அடிக்கல் நாட்டு தல் உள்ளிட்ட ரூ.47.65 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை ஆ.ராசா தொடங்கி வைத்தார்.
மேலும் 24.67 லட்சம் ரூபாய் மதிப்பில் லான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம், சண்முகசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண் குமார் , மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



