ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 28வது பட்டமளிப்புவிழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கி. சித்ரா அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பட்டம் பெறும் மாணவியரை வாழ்த்தினார்.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் துணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும் போது, திறமைகளை வளர்த்துக் கொள்வதோடு நன்மதிப்பு, வெற்றி, தலைமைப் பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
சிறப்புரை
கோயம்புத்தூர் பயோபார்ம் குரூப் நிறுவனங்களின் இயக் குனர் டாக்டர் ப்ரீத்தி மாரிமுத்து அவர்கள் மாணவியருக்குப் பட்டம் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
கல்லூரியில் கிடைக்கும் அறிவும் அனுபவமும் வாழ்க்கை முழுமைக்குமான அடிப்படையாக அமையும்.
நம்முடைய ஆற்றல்களைக் கொண்டு மற்றவர்களும் முன்னேற உதவ வேண்டும் என்று கூறியதோடு, பல்வேறு துறைகளிலும் சாதித்த பெண்களைப் பற்றிக் கூறிய அவர், பட்டம் பெற்ற மாணவியரை வெகுவாகப் பாராட்டினார்.
2 தங்கப்பதக்கம் உட்பட 16 மாணவியர் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றனர். விழாவில் இளநிலை, முதுநிலை மாணவியர் 621 பேர் பட்டம் பெற் றனர்.



