Homeபிற செய்திகள்கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், காவலர் குடியிருப்புகளில் ஆவின் பாலகம்- ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்

கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், காவலர் குடியிருப்புகளில் ஆவின் பாலகம்- ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்

கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன் கருதி, கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், காந்திபுரம் காவலர் குடியிருப்பு மற்றும் உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பு ஆகிய மூன்று இடங்களில் தனித்தனியாக மூன்று உயர்தர ஆவின் பாலகங்கள் திறப்பு விழா இன்று (27ம் தேதி) காலை நடந்தது. ஆவின் பாலகங்களை ஆணையர் பாலகிருஷ்ணன் அடுத்தடுத்து திறந்து வைத்தார்.

இந்த ஆவின் பாலகங்களில் காவலர்களின் நலன் கருதி பால், நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் உள்ளிட்ட 45 வகையான பால் பொருட்கள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

திறப்பு விழா

திறப்பு விழாவில் கோவை மாநகர ஆயுதப் படை காவல் துணை ஆணையர் டி.வி.முரளிதரன், தலைமையிட காவல் துணை ஆணையர் ஆர்.சுஹாசினி, ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் ஏ.சேகர், காவல் கட்டுப்பாட்டு அறை காவல் உதவி ஆணையர் சுரேஷ், கோவை ஆவின் நிறுவன பொது மேலாளர் ராமநாதன், மோட்டார் வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் கே.கோவிந்தராஜூ, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் எம்.பிரதாப்சிங் மற்றும் இருபால் காவலர்களும் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img