தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு ஐந்தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம், கண்ணன் மருத்துவமனை (சிதம்பரம்) மற்றும் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திரா மக்கள் மருந்தகம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைப்பெற்றது.
மருத்துவமுகாமை மாநில தலைவர் சேகர் துவக்கி வைத்தார்.
முகாமில் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புல முதல்வர் டாக்டர் ரமேஷ், மூட்டு மாற்று மற்றும் தண்டுவட சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவிகிருஷ்ணா, பொது மற்றும் குடும்பநல மருத்துவர் டாக்டர் அபிநயா, பொது மற்றும் குடும்ப நல மருத்துவர் டாக்டர் கிரண்ராஜ், கண் மருத்துவர் டாக்டர் அமிர்த ஜோதி, முட நீக்கவியல் டாக்டர் திவாகர் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.
முகாமில் 150 நபர்களுக்கு மேல் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இ.சி.ஜி., பிளட் பிரஷர், சர்க்கரை, ரத்தப் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டது. மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி கேந்திரா மக்கள் மருந்தகம் சார்பில் கேசவன் மருந்தாளுனர்கள் விக்னேஷ், முத்துக்குமார் ஆகியோர் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
முகாமில் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை கட்டணத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாய் சலுகை அளிக்கப்படும் என டாக்டர் ரமேஷ் அறிவித்தார். முகாமில் கண்ணன் மருத்துவமனை பணியாளர்கள் குமாரி, உஷா, சூரியா, ஆஷா, சுஜி, சுஷ்மா, பாலாஜி, பாஸ்கர், ஸ்ரீமதி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சங்க இளைஞரணி செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் முத்துக்குமார், தொழிற்சங்க செயலாளர் இராமச்சந்திரன், பாலசுப்பிரமணியன், சுரேஷ், மாரியப்பன், ராமலிங்கம், தில்லைநடராஜன், சிவக்குமார், உமாபதி, முருகன், சாமிநாதன், கிருஷ்ணகுமார், சிவக்குமார், சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவில் நகர பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.



