கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி புரொபஷனல் கோச்சிங் விங் மற்றும் வணிகவியல் மற்றும் தொழில்முறை கணக்கியல் துறை ஆகியவை இணைந்து ‘ஆடிட்டர்ஸ் கான்கிளேவ்’ நிகழ்ச்சியை நடத்தியது.
வணிகவியல் பள்ளி புல முதன்மையர் கு. குமுதாதேவி வரவேற்றார்.
முதல்வர் முனைவர் பி.கீதா தலைமை தாங்கி பேசினார்.
தலைமை நிர்வாகி முனைவர் செ.பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் சி.ஏ. கிராந்தி குமார், ஆடிட்டர் எஸ். ராஜேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.
அவர்கள், நிதித் துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்கள் குறித்து விளக்கினர். தொழில் முனைவோர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் யுக்திகளை எடுத்து ரைத்தனர். வணிகவியல் பட்டப்படிப்புடன் ஆடிட்டர் கல்வி கற்பதன் முக்கி யத்துவத்தை பகிர்ந்தனர்.
சிறப்புரை
ஹைதராபாத், டெலோடி காகின்ஸ் நிறுவனர், கணேஷ் பால கிருஷ்ணன், கே.சுதாகர், ராஜன் – கோ சர்வஜித் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
அவர்கள், நவீன நிதியமைப்பில் தொழில் வல்லுநர்களின் பங்களிப்பு குறித்து விவரித்தனர். கணக்கியல் துறை கல்வி யின் பன்னாட்டு தொழில் வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கினர். மாணவர்களின் ஐயங்க ளுக்கு பதிலளித்தனர்.
மாணவர் ஜி. சரண், தொழில்முறை பயிற்சி அனுபவத்தை எடுத்துரைத்தார். தொழில்முறை பயிற்சி பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இணைப் பேராசிரியை மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் டி.கார்த்திகா நன்றி கூறினார்.



