fbpx
Homeபிற செய்திகள்வலைதளங்களில் தமிழிலேயே எழுதுவதன் மூலம் மொழியை மேலும் வளர்க்கலாம்- டெல்லி தமிழ்ச்சங்க விழாவில் பேராசிரியர் பேச்சு

வலைதளங்களில் தமிழிலேயே எழுதுவதன் மூலம் மொழியை மேலும் வளர்க்கலாம்- டெல்லி தமிழ்ச்சங்க விழாவில் பேராசிரியர் பேச்சு

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் “தமிழ் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சங்கச் செயலாளர் இரா.முகுந்தன் தலைமை தாங்கினார். டெல்லி பல்கலைக் கழக சட்டத்துறைப் பேராசிரியர் புஷ்பக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இந்திய இரைப்பை குடலியல் சங்க முன்னாள் தலைவரும் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பேராசிரியரும் தேசியத் தேர்வுகள் வாரிய ஆலோசகருமான வி.ஜி.எம். இரைப்பை குடலியல் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் சிறப்புரையாற்றினார்.

சட்டத்துறைப் பேராசிரியர் புஷ்பக்குமார் பேசியதாவது: மொழி என்பது ஒரு சமூகத்தின் கண்ணாடி, சமூக வளர்ச்சியின் வழிகாட்டி. நமது தமிழ்மொழி உலகின் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழியாகும். தமிழ்மொழி தோன்றிய காலத்தைச் சரியாக நம்மால் கணிக்க இயலவில்லை.

துல்லியமாக தொல்காப்பியம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டதாக பல ஆய்வுகளிலிருந்து நாம் அறிய முடிகிறது. தமிழ்மொழி மக்களின் கடமை, உணர்வு என பல தளங்களில் நம்மை சரியான வழியில் கொண்டு செல்கிறது.

அன்று நமது மொழியில் மட்டுமே சிற்றிலக்கியம், பக்தி இலக்கியம், சங்க இலக்கியங்கள், இதிகாசங்கள் எனப் பல நூல்களின் வழியாக அன்றைய தமிழ் அறிஞர்கள், புலவர்கள் ஆகியோர் மக்களிடையே மொழியைச் சுவைபட எழுதுவதின் மூலம் எடுத்துச் சென்றனர்-.

இன்று மக்கள் தொழில் நுட்பக் காரணங்களினால் முக்கிய ஊடகமான கைபேசியிலேயே வாசிக்கின்றனர். எனவே, அனைவரும் இன்று புத்தகம் எழுதுவதோடு நின்றுவிடாமல் தங்களது கருத்துக்கள் மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களை பல்வேறு வலைதளங்களில் தமிழ்மொழியி லேயே எழுதுவதன் மூலம் மொழியை மேலும் வளர்ச்சியை நோக்கி அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு சிறப்பு விருந்தினர் மலேசிய தமிழ்ச் சங்கத்தலைவர் குணவதி ஆறுமுகம் பேசுகையில், எனது பயணம் மொழி வளர்ச்சியோடு நின்றுவிடாமல், குடும்பம் என்ற அமைப்பு உருவாகக் காரணமான திருமண பந்தம் சிதைவதால், அவர்களின் குழந்தைகள் மனோரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர்.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”

எனவே, தமிழ்ச்சமூகம் மகிழ்வுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தால் மொழியின் வழியே கலை, பண்பாடு அனைத்தையும் எளிதாக வளர்க்கலாம். எனவே, மலேசியாவில், திருமணத்திற்கு முன்பே நாங்கள் மக்க ளுக்கு கல்வி அளிக்கிறோம் என்றார்.
சிறப்பு விருந்தினர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் பேசுகையில், தமிழ் அன்றைக்கு எப்படி இருந்தது என்பதற்கு உதாரணமாக “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலில் காணலாம்.

அதற்குப் பிறகு, கவிப்பேரரசர் வைரமுத்து வரிகளான “நறுமுகையே நறுமுகையே” எனும் பாடலில் “யாயும் ஞாயும் யாராகியாரோ” என்ற வரிகளின் மூலம் மொழி வளத்தை அறியலாம். அருணகிரிநாதரின் பாடலான “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்ற பாடலில் தமிழ்மொழியை சந்தங்களில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறியலாம்.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ல்லித் தமிழ்ச் சங்கத்தின் சுப்புவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னை அபிநயா நர்த்தனால யாவின் குரு செல்வி திவ்ய பாரதியின் பரதநாட்டியம் நடைபெற்றது.
செயற்குழு உறுப்பினர் உஷா வெங்கட் தொகுப்புரை ஆற்றினார்.

டெல்லித் தமிழ்ச் சங்கப் பொருளாளர் அருணாச்சலம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் இணைப்பொருளாளர் வி.என்.டி.மணவாளன், செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜன், காத்திருப்பு உறுப்பினர் ரேவதி ராஜன் மற்றும் டெல்லிவாழ் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img