Homeபிற செய்திகள்மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பேரூர் ஆதின வளாகத்தில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல்...

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பேரூர் ஆதின வளாகத்தில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவையை சேர்ந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் கொண்டாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அதன்படி கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் பேரூராதீனம் மருதாசல அடிகளாருடன் இணைந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத போதகர்கள் இணைந்து நடத்திய பொங்கல் விழா நடைபெற்றது.

பொங்கல் விழா

இதில் இஸ்லாமிய மதரசாவில் பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பால கிருஷ்ணன் கலந்து பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.பேரூர் ஆதீன வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச் சியில் இந்திய ஒற்றுமையை பறை சாற்றும் விதமாக மதங்களை கடந்து அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img