fbpx
Homeபிற செய்திகள்கோவை பெதஸ்தா மையத்தில் டாக்டர் பால் தினகரன் பிரார்த்தனை

கோவை பெதஸ்தா மையத்தில் டாக்டர் பால் தினகரன் பிரார்த்தனை

கோவை காருண்யா நகரில் உள்ள பெதஸ்தா பிரார்த்தனை மையத்திற்கு, இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலை வேந்தருமான டாக்டர் பால் தினகரன், அவரது துணைவியார் இவாஞ்சலின் வரும் 15, 16-ம் தேதிகளில் வருகை தர உள்ளனர்.

இவரது பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொண்ட மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, மக்களை நேரில் சந்தித்து, தனித்தனியாக பிரார்த்தனை செய்ய இருக்கிறார்.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் தனித்தனி பிரார்த்தனையில் பங்கு பெற விரும்பும் மற்றும் விபரங்களுக்கு 9787846545 அல்லது 9487846601 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

இப்பிரார்த்தனைக்கு வருகிறவர்களின் வசதிக்காக கோவையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்தகவலை செய்தி தொடர்பாளர் ஜெ.ஜெப சிங் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img